பதிவு:2024-10-20 18:00:27
திருவள்ளூர் நகராட்சி பள்ளிகளில் கொசு மருந்து தெளிப்பு :
திருவள்ளூர் அக் 18 : வடகிழக்கு பருவ மழையால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளபள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. இதனால் வடகிழக்கு பருவ மழையினால் பள்ளி மாணவர்களுக்கு தொற்று ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் தலைமையில் 5 குழுக்களாக திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும் கொசு மருந்து, புகை அடிக்கும் பணி மற்றும் கிருமிநாசினி பவுடர் தெளிக்கும் பணி நடைபெற்றது.