வெங்கத்தூர் ஊராட்சி 15 வது வார்டில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குறைந்தழுத்த மின்சாரம் வருவதாக பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம் :

பதிவு:2024-10-20 18:02:33

திருவள்ளூர் அக் 19 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி 15- வது வார்டில் 1000 குடியிருப்புகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வெங்கத்தூர் ஊராட்சி மணவாளநகரில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்காமல் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அதே நேரத்தில் அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. வெங்கத்தூர் ஊராட்சி மணவாள நகரில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் தர வேண்டுமென்று பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை மின்சார வாரியம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஏசி பிரிட்ஜ் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருப்பதாலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மணவாள நகரில் உள்ள துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மேலும் பாப்பரம்பாக்கத்தில் இருந்து வரும் மின்சாரத்தை ரத்து செய்து மணவாள நகரில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின்சார வாரிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. காக்களூர் துணை மின் நிலையத்திலிருந்து திருவள்ளூர் நகர எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுவதால் இங்கே மின்சாரம் வழங்க இயலாத நிலை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே முறையாக பராமரித்து அந்தந்த பகுதிகளுக்கு தேவையான மின்சாரத்தை அந்தந்த துணை மின் நிலையங்களில் இருந்து வழங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.