சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு நிலம் கையகப்படுத்தல் மற்றும் நியாயமான இழப்பீடு சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் :

பதிவு:2024-10-20 18:07:50

திருவள்ளூர் அக் 19 : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில் எதிரே சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு 2013 ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் மற்றும் நியாயமான இழப்பீடு சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.ஸ்ரீநாத் தலைமை தாங்கினார்.இதில் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம், மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் சி.பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல் அகமது, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் கோட்ட செயலாளர் பி.நேதாஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.

அப்போது சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு 2010}14 ஆம் ஆண்டில் விளை நிலங்களை கையகப்படுத்தி 15 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை உரிய நியாயமான இழப்பீடு தொகை பெறறவில்லை. விவசாய நிலம், ஆழ்துளைக் கிணறுகள், பயன்தரும் மரங்கள், குடியிருக்கும் வீடுகள், வாழ்வாதாரமாக இருந்த சிறு கடைகள் இப்படி அனைத்தையும் தேசத்தின் வளர்ச்சிக்காக கொடுத்துவிட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தெருவில் நிற்கிறேறாம். கடந்த 2013 இல் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நியாயமான இழப்பீடு சட்டம் மூலம் இழப்பீடு வழங்க வேண்டுமே தவிர, பழைய சட்டங்களை காரணம் காட்டக் கூடாது. 15 ஆண்டுகளுக்கான வட்டியுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.