திருப்பாச்சூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு :

பதிவு:2024-10-20 18:09:34



திருப்பாச்சூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு :

திருப்பாச்சூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு :

திருவள்ளூர் அக் 19 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பாச்சூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த ஜி.சோபன்பாபு. இந்த ஊராட்சியில் 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர் புகாரின் காரணமாக ஊராட்சி மன்றத் தலைவருக்கு நிதி கையாளும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் பதவி காலம் முடிந்ததையடுத்து திருவள்ளூர் நகராட்சியுடன் திருப்பாச்சூர் ஊராட்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சியை இணைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனிடையே அக்டோபர் 2 -ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை.

இதனால் இன்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பாச்சூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கிராமத்தில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பெரும்பாலான பெண்கள் பயன்பெற்று வந்த நிலையில் நகராட்சியுடன் இணைப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடிய சூழ்நிலை இருப்பதால் நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என இந்த கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நகராட்சியுடன் இணைத்தால் வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை குடும்ப அட்டை போன்ற அரசு ஆவணங்கள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.