பதிவு:2024-10-21 14:50:21
தீர்த்தம்கரயம்பட்டு, விளாங்காடுபாக்கம் ஆகிய மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் அக் 21 : திருவள்ளூர் மாவட்டம். புழல் ஒன்றியத்திற்க்குட்ப்பட்ட தீர்த்தம்கரயம்பட்டு, விளாங்காடுபாக்கம் ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த வாரம் பெய்த கனமழையில் பல்வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. அவற்றில் அனைத்து இடங்களிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் எந்த மக்களுக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் துரித வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்களுக்கு சுமூகமான நிலைமை சமாளிக்கப்பட்டது.மேலும், செங்குன்றம் பகுதியில் சில இடங்களில் இன்று மழை நீர் தேங்கி இருப்பதை உடனடி அப்புறப்படுத்திட நடவடிக்கை எடுப்பதற்காக முயற்சித்து வருகிறோம். தீர்த்தம்கரயம்பட்டு மற்றும் பாலவாயல் குமரன் நகர் பகுதி, இதனை சார்ந்திருக்கின்ற பகுதிகளான பாடியநல்லூர் , விவேக் அக்பர் நகர், பாலவாயல், காட்டூர், ஸ்டார் சிட்டி, மற்றும் விளங்காடுபாக்கம் மற்றும் இதை ஒட்டியுள்ள அனைத்து பகுதிகளிலும் பாடியநல்லூர் ஏரியினை சூழ்ந்துள்ள நிலங்கள் ஆகும். இந்நிலங்கள் ஒரு காலத்தில் விவசாய நிலங்களாக இருந்தது தற்பொழுது வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுள்ளது. சில வீடுகள் அங்காங்கே இருக்கின்றன.
புதிதாக வடிகால்வாய்கள் அமைக்கும் போது ஏதேனும் கட்டிடம் குறுக்கே அமைந்திருந்தால் கூட அதை உடனடியாக பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர்கள்,புழல் மற்றும் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.