திருவள்ளூரில் வீரவணக்க நாளை முன்னிட்டு நினைவுத் தூணுக்கு மாவட்ட எஸ் பி மலர் வளையம் வைத்து அஞ்சலி :

பதிவு:2024-10-21 14:53:03

திருவள்ளூரில் வீரவணக்க நாளை முன்னிட்டு நினைவுத் தூணுக்கு மாவட்ட எஸ் பி மலர் வளையம் வைத்து அஞ்சலி :

திருவள்ளூரில் வீரவணக்க நாளை முன்னிட்டு நினைவுத் தூணுக்கு மாவட்ட  எஸ் பி  மலர் வளையம் வைத்து அஞ்சலி  :

திருவள்ளூர் அக் 21 : அக்டோபர் 21- ம் நாளை ஆண்டுதோறும் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. 1959 ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியின் போது 213 பேர் உயிர் நீத்தனர்.

திருவள்ளூர் மாவட்ட எஸ்பி. அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு எஸ்.பி., ரா.சீனிவாச பெருமாள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் ஏடிஎஸ்பி ஹரிக்குமார், டிஎஸ்பி க்கள் லோகநாதன், கந்தன், தமிழரசி, சாந்தி சேகர், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் காவலர்கள், ஓய்வு பெற்ற காவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து 63 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வீர மரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் கலந்து கொண்டனர்.