திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக 53 ஆம் ஆண்டு தொடக்க விழா : முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பி வி ரமணா ஆகியோர் பங்கேற்பு :

பதிவு:2024-10-21 14:55:32



திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக 53 ஆம் ஆண்டு தொடக்க விழா : முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பி வி ரமணா ஆகியோர் பங்கேற்பு :

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக 53 ஆம் ஆண்டு தொடக்க விழா : முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பி வி ரமணா ஆகியோர் பங்கேற்பு  :

திருவள்ளூர் அக் 21 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேட்டில் அதிமுக 53-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபுெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுதாகர், மாவட்ட அவைத்தலைவர் இ.இன்பநாதன், திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி, ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர், பூண்டி ஒன்றிய செயலாளர் மாதவன், , கடம்பத்தூர் ஒன்றிய அவைத்தலைவர் சிற்றம் சீனிவாசன், பொருளாளர் பூபாலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக மகளிர் அணி செயலாளரும்,, செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தலைமைக் கழக பேச்சாளர்கள் இரா.அன்பழகன், புதூர் மணி ஆகியோரும் சிறப்புரையாற்றினார். முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசும் போது, புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் தாலிக்கு தங்கம் , மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், லேப்டாப் சைக்கிள் ஸ்கூட்டி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு, மற்றும் மருத்துவ செலவுகளுக்கு தொகை வழங்கினார். கருவறை முதல் கல்லறை வரை பெண் பிள்ளைகளை நான் காப்பாற்றுகிறேன் என்று அம்மா அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார்.

ஆனால் தற்போது மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் தொகை அது அவங்க அப்பன் கருணாநிதி வீட்டு பணம் அல்ல. அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட திட்டங்களை அனைத்தையும் நிறுத்தி அதிலிருந்து வரும் பணத்தை திமுக அரசு மகளிர்க்கு கொடுத்து வருகிறது. உங்களிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு வரி என்ற பெயரில் பத்தாயிரம் ரூபாய் வரும் வசூல் செய்து விடுவதாக குற்றம் சாட்டினார். திமுக ஆட்சி மோசமான ஆட்சி என்பதற்கு உதாரணமாக , மோசடி செய்து சிறையில் ஒன்றரை வருடம் சிறையில் இருந்து விட்டு வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மந்திரி பதவியை கொடுத்த ஒரே கட்சி திமுகவாகத்தான் இருக்கும். இது ஒன்றே போதும் திமுக மோசமான ஆட்சி செய்கிறது என்பதற்கு என சாடினார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா பேசும்போது, திமுக ஆட்சிக்கு வந்து முதலமைச்சர் திருவள்ளூர் தொகுதி மக்களுக்கு எதையும் செய்யவில்லை... ஆனால் அவரது கெஸ்ட் ஹவுஸ் கடம்பத்தூர் ஒன்றியம் உலந்தை ஊராட்சியில் 5 ஏக்கரில் இருந்ததை தற்போது 50 ஏக்கர் அளவுக்கு வாங்கி போட்டு இருப்பதுதான் அவரது சாதனையாக பார்க்கப்படுகிறது. அதேபோல் திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வி. ஜி. ராஜேந்திரன் திருவள்ளூர் நகரில் மட்டும் தெரு தெருவுக்கு பேருந்து நிறுத்தத்தை ஏற்படுத்தி 10 பேர் 20 பேர் காத்திருக்க வேண்டிய இடத்திற்கு 200 பேர் நிற்கும் அளவிற்கு கட்டி அதில் அவரது புகைப்படத்தை ஒட்டி தன்னைத் தானே விளம்பரப்படுத்தி வருகிறார். இதுதான் அவரது சாதனை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் திமுக ஆட்சியின் கையாலாகாத தனத்தால் பொதுமக்கள் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அது நிச்சயம் நிறைவேறும் என முன்னாள் அமைச்சர் பி வி ரமணா பேசும்போது தெரிவித்தார்.

இதில் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் கே.பி.எம்.எழிலரசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி அவைத் தலைவர் எஸ்.ஏ.நேசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை தலைவர் எஸ்.ஞானகுமார், ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கோட்டீஸ்வரன், குமரேசன் உட்பட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.