திருவள்ளூரில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் 6 - ஆம் ஆண்டு விழா : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்தார் :

பதிவு:2024-10-28 12:11:22

திருவள்ளூர் அக் 26 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 6 - ஆம் ஆண்டு விழாவை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்து, ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் கேடயங்கள் வழங்கி பேசினார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் 11.01.2012 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் துவங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், 23 செப்டம்பர் 2018 அன்று பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த காப்பீடு திட்டமாக செயல்பட்டு வருகிறது.

இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 7,07,418 நபர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட அட்டை பெற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 13 அரசு மருத்துவமனைகளும், 40 தனியார் மருத்துவமனைகளும் காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டு இலவச சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுவரை 1,81,747 நபர்கள் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூபாய் 2,74,02,52,284 செலவில் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் 6 - ஆம் ஆண்டு விழா நடைபெறுகிறது இவ்விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், சிறப்பாக பங்களிப்பை நல்கி அரசு மற்றும் தனியார் மருத்துவமனை அலுவலர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.இதில் இணை இயக்குநர் சுகாதாரம் மீரா, மாவட்ட திட்ட அலுவலர் சுரேஷ் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.