மகளிர் ஆணையத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கையை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் அ.ச.குமரி ஆய்வு :

பதிவு:2022-06-02 13:42:18



மகளிர் ஆணையத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கையை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் அ.ச.குமரி ஆய்வு :

மகளிர் ஆணையத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கையை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் அ.ச.குமரி ஆய்வு :

திருவள்ளூர் ஜூன் 02 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக மகளிர் ஆணையத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கையை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் அ.ச.குமரி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டு பேசினார்.

பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளை எதிர்கொள்ள காவல்துறை மூலம் விழிப்புணர்வு இயக்கம் ஏற்படுத்துதல், மற்றும் பெண்கள் பள்ளி, கல்லுரிகள் மற்றும் வேலைக்காக வெளியில் செல்லும்போது வழியில் ஏற்படும் பிரச்சினைகளை கண்காணிக்கவும் மகளிருக்கான உதவி மையம் ஏற்படுத்தவும், நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு அவர்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள சட்டங்கள் , பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளுர் புகார் குழு உள்ளக புகார் குழு போன்ற குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிக்கல்வித் துறையில் வெளியிடப்படும் மாணவர் உலகம் இதழில் மாணவ மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்துதல் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் புகார் பெட்டிகளை அமைத்தல், பள்ளிகளில் பாதுகாப்பு குழுமத்தில் மாணவர்களையும் இடம் பெற செய்தல் போன்ற நடவடிக்கைகளை மாவட்ட கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மருத்துவத்துறை சார்பாக இளம் வயது கருவுதல்களையும், சிசுக் கொலைகளையும் குறைக்க, தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகள் கட்டிடத் தொழில்களில் ஈடுபடுவதை தடுக்க தொழிலாளர் நலத் துறைக்கும், அத்தகைய தொழில்களில் ஈடுபடும் குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களை அங்கன்வாடி மையங்களில் சேர்த்து ஊட்டச்சத்து வழங்கவும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலக பணியாளர்களுக்கும் அறிவுறுத்தி, மேலும், குழந்தை திருமணத்தை குறைக்க கிராம சபை கூட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுரைகளை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் வழங்கினார்.

கூட்டத்தில் மகளிர் ஆணையத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 34 மனுக்களில், பெரும்பாலான மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மீதமுள்ள ஒரு சில மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவரால் அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாய்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மு.மீனாட்சி. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.ஹிதாயத்துன் நூரியா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.