முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது புகார் கொடுத்தவர் மீது வழிப்பறி வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் காவல்துறையினர் :

பதிவு:2024-10-28 12:22:42

திருவள்ளூர் அக் 26 : திருவள்ளூர் அடுத்த பட்டரைப் பெரும்புதூர் கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி நான்சி. இவர்கள் வீட்டில் இருந்தபோது பட்டரைப் பெரும்புதூர் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சத்யா என்பவர் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவரை தன்னுடைய சக நண்பர்களான ஆண்டனி, கர்ணன், தருமன், தாவீது, மதன், கலைவாணன், ஆகியோரை தூண்டிவிட்டு சரமாரியாக தாக்கியதில் முகத்தில் படுகாயம் அடைந்த விஜய்,திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக கடந்த 23ஆம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து திருவள்ளூர் பி2 தாலுக்கா காவல் நிலையத்தில்உதவி ஆய்வாளரிடம் புகார் அளித்தும் புகாரை ஏற்றுக் கொள்ளாமல் எதிர் தரப்பினருக்கு சாதகமாக காவல்துறையினர் செயல்பட்டு புகார் அளிக்க சென்ற விஜய் மீது வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதாக பொய்யான வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதனையடுத்து தன்னுடைய கணவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென கோரி பாதிக்கப்பட்ட விஜய்யின் மனைவி நான்சி மற்றும் அவரது குடும்பத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனது கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று பிற்பகல் 2 மணி அளவில் புகார் அளித்துள்ளார். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.