அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 30 ம் தேதி வரை நேரடி சேர்க்கை : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-10-28 12:24:31



அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 30 ம் தேதி வரை நேரடி சேர்க்கை : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 30 ம் தேதி வரை நேரடி சேர்க்கை  : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் அக் 26 : அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் நேரடி சேர்க்கை 1 ம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூரில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்) நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தையல் தொழிற்நுட்பம் 1 வருடம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கோபா 1 வருடம்,கட்டட பட வரைவாளர் 2 வருடம் சுருக்கெழுத்தர் 1 வருடம் (ஆங்கிலம், தமிழ்) ஆகிய பயிற்சியில் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. இந்தப் பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ.750, இலவச பேருந்து பயண அட்டை, மிதிவண்டி, பாட புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை, மூடு காலணி மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். அதோடு தமிழக அரசு வழங்கும் உயர்கல்வி உதவித்தொகை (6 முதல் பிளஸ் 2 வரை ) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு ரூ.1000 கூடுதலாக வழங்கப்படும்.

எனவே விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் சான்றிதழ் , மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 5 ஆகியவையுடன் நேரில் வர வேண்டும். இதற்கு சேர்க்கை கட்டணம் ரூ.235 ஆகும். மேலும், இது குறித்து தொலைபேசி எண்கள் 9840756210/ 9444017528 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.