தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை உதவியுடன் டாக்டர். எம்.ஜி. ஆர் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து மீனவ பழங்குடியினருக்கு பயிற்சி :

பதிவு:2024-10-28 12:27:15



தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை உதவியுடன் டாக்டர். எம்.ஜி. ஆர் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து மீனவ பழங்குடியினருக்கு பயிற்சி :

தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை உதவியுடன் டாக்டர். எம்.ஜி. ஆர் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து மீனவ பழங்குடியினருக்கு பயிற்சி :

திருவள்ளூர் அக் 28 : தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை உதவியுடன் செயல்படுத்தப்படும் தொல்குடி வேளாண்மை மேலாண்மை (ஐந்திணை) திட்டத்தின் மூலம் பூண்டி ஒன்றியத்தில் உள்ள பழங்குடியின மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 90 மீனவ பழங்குடியின மக்களுக்கு மீன்பிடி படகு மற்றும் வலை, மீன்பிடி வலை, மீன் விற்பனை தள்ளுவண்டி, மீன் விற்பனைக்கான குளிர்சாதான பெட்டி ஆகியவை சென்னை பழங்குடியினர் நலத்துறை மற்றும் திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கினர்.

இத்திட்டத்தின் மூலம் பழங்குடியின மீனவ மக்களுக்கு மீன் மதிப்பு கூட்டல், மீன் விற்பனை மற்றும் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி புதூர் காந்தி கிராமம் இருளர் காலனியில் நடைபெற்றது. இப்பயிற்சியின் நோக்கத்தை பற்றி ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் பி.ஸ்டீபன் எடுத்துரைத்தார். மேலும் இது போன்ற பயிற்சிகள் பூண்டி ஒன்றியத்தில் உள்ள பிற கிராமங்களில் உள்ள பழங்குடியின மீனவ மக்களுக்கு தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை உதவியுடன் டாக்டர். எம் ஜி ஆர் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்தப்பட உள்ளதாக பி.ஸ்டீபன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பொன்னேரியில் உள்ள டாக்டர்.எம்ஜிஆர் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவி பேராசிரியர் லாயுடு கிறிஸ்பின் தமிழ்நாடு உள்நாட்டு மீனவ நல வாரியத்தின் பயன்கள், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்கள், உயிர் மீன் வியாபாரம், விரால் மீன் வளர்ப்பு, மீன் குஞ்சு உற்பத்தி மையங்கள் அமைப்பது பற்றியும் விளக்கி கூறினார்.

பின்னர் பொன்னேரியில் உள்ள டாக்டர்.எம்ஜிஆர் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவி பேராசிரியர் என்.முரளிதரன் மீன் மதிப்பு கூட்டுதல் (கருவாடு, மீன் ஊறுகாய், மீன் பிரியாணி, மீன் கட்லெட், மீன் குர்குரே) மற்றும் மீன் கழிவிலிருந்து (மீன் தோல், செதில், எலும்புகள், உள்ளுறுப்புகள்) தயாரிக்கும் பொருட்கள் (மீன் உரம், மின் தீவனம் மற்றும் அழகு சார்ந்த பொருட்கள்) பற்றி விளக்கி கூறினார். மேலும், பழங்குடியின மீனவ மக்களுக்கு டாக்டர்.எம்ஜிஆர் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள இன்குபேஷன் மையத்தில் மேற்கூறியவற்றை பயிற்சி அளித்து சான்றிதழ் தருவதாக கூறினார்.

இதில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் டி.விஜயன், பகுதி ஒருங்கிணைப்பாளர் ஜெ. பழனி மற்றும் பட்டரைபெரும்புதூர் மீனவ சங்க தலைவர் கே.இயேசு பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.தினேஷ் குமார் நன்றி கூறினார்.