கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்த காதலியை கத்தியால் குத்தியதில் பலத்த காயம் : ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை : காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர் :

பதிவு:2024-10-28 12:38:13

திருவள்ளூர் அக் 28 : மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு, கிலாய் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராணி (24). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இதனால் விஜயராணி சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பண்ணூர் கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி தினந்தோறும் வேலைக்குச் சென்று வருகிறார்.

இந்நிலையில் விஜயராணி மணவாளநகர் அடுத்த கீழ்நல்லாத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்யும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்து பெருமாள் (24) என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஒரு மாத காலமாக பேசாமல் பிரிந்து உள்ளனர். இந்நிலையில் விஜயராணி வீட்டில் இருந்தபோது அங்கு வந்த முத்துபெருமாள் விஜயராணியை தகாத வார்த்தைகளால் பேசி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த விஜயராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூரில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து முத்து பெருமாளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.