பதிவு:2024-10-28 12:39:39
திருமழிசை மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த ரவுடி கைது :
திருவள்ளூர் அக் 28 : திருமழிசை அடுத்த மேல்மனம் பேடு பகுதியை சேர்ந்தவர் விஷ்வா. ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் திருமழிசை மற்றும் அதனை சுற்றியுள்ள நிறுவனங்களில் மாமூல் கேட்டு மிரட்டுவதாக வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் - விஷ்வாவை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர் தனியார் நிறுவனத்தில் மிரட்டி மாமூல் வசூலித்து வந்தது தெரிய வந்தது. மேலும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்று வந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.இதையடுத்து விஷ்வாவை போலீசர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.