திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாசு மற்றும் விபத்தில்லா தீபாவளி தொடர்பாக விழிப்புணர்வு பேரணி : மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார் :

பதிவு:2024-10-28 12:42:27



திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாசு மற்றும் விபத்தில்லா தீபாவளி தொடர்பாக விழிப்புணர்வு பேரணி : மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாசு மற்றும் விபத்தில்லா தீபாவளி தொடர்பாக விழிப்புணர்வு பேரணி : மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் அக் 28 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாசு மற்றும் விபத்தில்லா தீபாவளி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.

தீபாவளித் திருநாளில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியவர்கள் மற்றும் நோய்வாய்பபட்டுள்ள முதியவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மாவட்ட அளவில் உச்சநீதிமன்ற ஆணையின்படி நடவடிக்கை எடுக்க போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குனர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் தெரிவித்தார்.

முன்னதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்த உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒலி அறிவிப்புகளுடன் கூடிய மூன்று ஆட்டோக்கள் மூலம் 28.10.2024, 29.10.2024 மற்றும் 30.10.2024 ஆகிய மூன்று தினங்களில் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இது குறித்த துண்டு பிரசுரமும் பொதுமக்களுக்கு விநியோகிக்க படவுள்ளது. இம்மூன்று பிரச்சார ஆட்டோக்களை மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மஞ்சப்பைகள் வழங்கினார். இதில் திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் கா.கயல்விழி மற்றும் உதவி பொறியாளர்கள் கி.ர.ஶ்ரீலேகா மற்றும் சு.சபரிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.