உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 23-வது நாளாக ரேக்ளா குதிரை வெள்ளோட்டம் : அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கி வைத்தார் :

பதிவு:2024-11-04 13:28:20



உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 23-வது நாளாக ரேக்ளா குதிரை வெள்ளோட்டம் : அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கி வைத்தார் :

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 23-வது நாளாக ரேக்ளா குதிரை வெள்ளோட்டம் : அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கி வைத்தார் :

திருவள்ளூர் நவ 04 : தமிழ்நாடு துணை முதலமைச்சரும், மாநில திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வி.ஜெ.உமாமகேஸ்வரன் ஏற்பாட்டில் 47 நாட்கள் தொடர் நிகழ்ச்சிகள் தொடக்க விழா கடந்த 14-ஆம் தேதி புல்லராம்பாக்கத்தில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு முதல் நாள் விழாவில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் இரவு படிப்பகத்தை திறந்து வைத்தனர். 2-ஆம் நாள் சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பரிசுகளும், 3-ஆம் நாள் தூய்மை பணியாளர்களுக்கு ரெயின் கோட்டுகளும், 4-ஆம் நாள் பெண்களுக்கு புடவைகளும் வழங்கினர்.

பிறகு 7-வது நாள் பெண்களுக்கான கோலப் போட்டியும், 8-வது நாள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளும், 9-வது நாள் இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 22-வது நாளாக திருவள்ளூரில் நேற்று முன்தினம் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இந்நிலையில் 23 வது நாளாக நேற்று புல்லரம்பாக்கத்தில் ரேக்ளா குதிரை வெள்ளோட்டம் நடைபெற்றது. சிறிய குதிரை, நடு குதிரை பெரிய குதிரை என 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 37 குதிரைகள் கலந்து கொண்டன.

மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.ஜே.உமா மகேஸ்வரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் டி.ராமகிருஷ்ணன், மாவட்ட ரேக்ளா குதிரைகள் உரிமையாளர்கள் சாரதிகள் நல சங்கத் தலைவர் பி.நந்தகுமார், பி.கே.இ.கபிலன், ஊராட்சி தலைவர் மா.தமிழ்வாணன், பி.கே.இ.நாகராஜ், சந்தோஷ், முனுசாமி, மதியழகன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் ரேக்ளா குதிரை வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த குதிரை வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.அதன்படி சிறிய குதிரைக்கான போட்டியில் 15 குதிரைகள் பங்கேற்றதில் முதல் பரிசை திருவள்ளூர் முருகேசன், 2-வது பரிசை திருவள்ளூர் சூப்பர் ஸ்டார் குரூப்ஸ் ஐ சேர்ந்த திருப்பத்தூர் சாது, 3- வது பரிசை பாடி மனோ ஆகியோர் பெற்றனர்.

நடு குதிரைக்கான போட்டியில் 16 குதிரைகள் பங்கேற்றத்தில் முதல் பரிசை கோவில் பதாகையை சேர்ந்த விக்கி, 2-வது பரிசை மூலக்கடை பட்டறைக்காரர், 3-வது பரிசை திருவள்ளூர் சுரேஷ் ஆகியோர் பெற்றனர்.பெரிய குதிரைக்கான போட்டியில் 8 குதிரைகள் பங்கேற்றத்தில் முதல் பரிசை திருவல்லிக்கேணி ஜம்பு, 2-வது பரிசை பாடி மனோ, 3-வது பரிசை வீராபுரம் ஆனந்தபாபு ஆகியோர் பெற்றனர்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜே.ரமேஷ், மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதரன், சங்கீதா சீனிவாசன், ஜி.விமல்வர்ஷன், வழக்கறிஞர் வி.வினோத், வி.தியாகராஜன், கே.சரவணன், வி.எஸ்.சதீஷ்குமார், ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் ஆர்.கிரண்குமார், ஒன்றிய நிர்வாகிகள் மனோகரன், விமலா குமார், டி.தென்னவன், ஈக்காடு கே.முகமது ரஃபி, சிற்றரசு, டி.முரளிகிருஷ்ணன், சுமன், ராஜ்மோகன், ராஜாராம், இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.