திருவள்ளூரில் ஆதிதிராவிடர் மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் : தேசிய பட்டியல் இனத்தினவருக்கான ஆணையத்தின் உறுப்பினர் வட்டி பள்ளி ராம்சந்தர் பங்கேற்பு :

பதிவு:2024-11-08 12:34:26



திருவள்ளூரில் ஆதிதிராவிடர் மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் : தேசிய பட்டியல் இனத்தினவருக்கான ஆணையத்தின் உறுப்பினர் வட்டி பள்ளி ராம்சந்தர் பங்கேற்பு :

திருவள்ளூரில் ஆதிதிராவிடர் மக்களுக்கு  செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் : தேசிய பட்டியல் இனத்தினவருக்கான ஆணையத்தின் உறுப்பினர் வட்டி பள்ளி ராம்சந்தர் பங்கேற்பு :

திருவள்ளூர் நவ 07 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது .மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.தேசிய பட்டியல் இனத்தினவருக்கான ஆணையத்தின் உறுப்பினர் வட்டி பள்ளி ராம்சந்தர், பட்டியல் இனத்தினவருக்கான ஆணையத்தின் இயக்குநர் டாக்டர்.எஸ். ரவிவர்மன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள், செங்குன்றம் துணை ஆணையர் கீ.அ. பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்பொழுது தேசிய பட்டியல் இனத்தினவருக்கான ஆணையத்தின் உறுப்பினர் தெரிவித்ததாவது :

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமாகவும் பிரதம மந்திரி நலத்திட்டங்கள் குறித்தும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் மற்றும் வழக்குகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு தேவையான நிலம் மற்றும் கல்வி , சமுக நலன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக செயல்படுத்தும் திட்டப் பணிகள், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வங்கிக் கடன் உதவிகள் குறித்தும், மாவட்ட ஆட்சியர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிறப்பாக செய்து வருகிறார்கள் .

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன பணியாளர்களுக்கு முறையாக உயர் பதவி வழங்கப்படுவது குறித்தும்,மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும் கடனுதவிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் 40 துறைகள் உள்ளது அந்த 40 துறைகளின் அலுவலர்களுடன் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ஆணையத்திற்கு வர வேண்டும். ஆணைத்திற்கு வந்து புகார் அளித்தார் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் சிறப்பாக உள்ளது மேலும் பிரதம மந்திரி திட்டப் பணிகளின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் மேற்கொண்டுள்ள அறிக்கையினை இந்திய அரசு பிரதம மந்திரியிடம் சமர்ப்பிப்பேன் என தேசிய பட்டியல் இனத்தினவருக்கான ஆணையத்தின் உறுப்பினர் வட்டி பள்ளி ராம்சந்தர் தெரிவித்தார்.

மேலும் ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்கள், மற்றும் விடுதிகள் எண்ணிக்கை மற்றும் தங்கி பயிலும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை குறித்தும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட பணிகள் குறித்தும், கிராமப்புற சுகாதார திட்ட பணிகள் குறித்தும், தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட கடன் உதவிகள் குறித்தும், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டப் பணிகளின் மூலம் வழங்கப்பட்ட வங்கி கடன் உதவிகள் குறித்தும், ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதிகளில் கை பம்புகள் நிறுவப்பட்ட விவரங்கள் குறித்தும், கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும், நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மக்களுக்கு அட்டை மற்றும் வேலை பணிகள் வழங்கியது குறித்தும், பிரதான் உஜ்வால் யோஜ்னா திட்டத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட எரிவாயு இணைப்பு குறித்தும், ஆதிதிராவிடர் மக்கள் எரிவாயு இணைப்பு கேட்டு விண்ணப்பங்கள் ஏதும் வழங்கியிருந்தால் அவர்களுக்கு உடனே வழங்கிட வேண்டும். பிரதம மந்திரி ஜன் தன் கணக்கு, வங்கி கணக்கு ஆதிதிராவிடர் பயனாளிகள் தொடங்கப்பட்ட விபரங்கள் குறித்தும், மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி கடன் உதவி வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மக்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்கிய விபரங்கள் குறித்தும், வன்கொடுமை தடைச் சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகள் எண்ணிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் .செல்வராணி, வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம், (திருவள்ளூர்),தீபா (திருத்தணி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.