பதிவு:2024-11-08 12:36:25
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் மூன்றாவது காலாண்டு கூட்டம் :
திருவள்ளூர் நவ 07 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் மூன்றாவது காலாண்டு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நுகர்வோர் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அவற்றுக்கான பதில் அறிக்கையினை சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு தெரிவிக்க வேண்டும். சாலைகள் ஆக்கிரமிப்பு மழை நீர் வடிகால் அமைத்தல் ,பொது சுகாதாரத்தை பராமரித்தல், அனுமதி இல்லாத விளம்பர பதவிகளை அப்புறப்படுத்துதல், ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து தீர்வு காணுதல், மேலும் நுகர்வோர் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் துறை அலுவலர்கள் அந்தந்த துறைகளில் நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டுக்கு ஒரு முறை கூட்டம் நடத்திடவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் மாவட்ட வளங்கள் அலுவலர் கண்ணன், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.