திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ம.க சார்பில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் புகார் மனு :

பதிவு:2024-11-08 12:38:30



திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ம.க சார்பில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் புகார் மனு :

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ம.க சார்பில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் புகார் மனு :

திருவள்ளூர் நவ 07 : கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மஞ்சன்கொல்லை கிராமத்தில் உள்ள பிரச்சனையை பெரிதாக்கி, வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் பு.த.அருள்மொழி மற்றும் அப்பகுதி மாவட்ட செயலாளரின் தலையை துண்டிப்பேன் என ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நீதி வள்ளல், அரங்க தமிழ் ஒளி, அறிவுடைநம்பி, செல்வராணி, பா.தாமரைசெல்வன் உள்பட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாளிடம் புகார் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் இ.தினேஷ்குமார் தலைமையில் மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி, மாவட்ட அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன்,வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பூபதி, தொகுதி செயலாளர் கேசவன், தலைவர் வழக்கறிஞர் அன்பு உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர்ந்து பாமகவினர் மீது அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே கட்சி பாகுபாடின்றி விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யவில்லையெனில் டாக்டர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் அறிவுறுத்தலின் பேரில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்தனர்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், வினோத், கேசவன், சுரேஷ், ஏழுமலை, சண்முகம், நகர செயலாளர் கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் சரவணன், குமார், கண்ணன், லஷ்மி நாராயணன், பொருளாளர் சித்ரா, அஞ்சலி , கௌரி உட்பட பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.