திருவள்ளூரில் மது அருந்திக் கொண்டிருந்த போது நண்பர்களுக்கிடையே மோதல் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது : 3 பேருக்கு வலை வீச்சு :

பதிவு:2024-11-08 12:44:02



திருவள்ளூரில் மது அருந்திக் கொண்டிருந்த போது நண்பர்களுக்கிடையே மோதல் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது : 3 பேருக்கு வலை வீச்சு :

திருவள்ளூரில் மது அருந்திக் கொண்டிருந்த போது நண்பர்களுக்கிடையே மோதல் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது : 3 பேருக்கு வலை வீச்சு :

திருவள்ளூர் நவ 07 : திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு மகன் ஜான் (31). ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி இரவு 8 மணியளவில் தனது நண்பர்களான பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ் (24), ஜான்சன் மகன் பிராங்க்ளின் (22), டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த மைக்கேல் மகன் பிரசாந்த், பெரியகுப்பம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் உதயா (எ) கறி உதயா(24) அருண் (25) மற்றும் குணசேகரன் மகன் ஸ்டீபன் ஆகியோர் ஆயில் மில் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது ஜானுக்கும், அவருடைய நண்பர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறில் குடி போதையில் ஜானை தகாத வார்த்தைகளால் பேசியும், கையாலும், பீர் பாட்டிலாலும் அடித்துவிட்டு, உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். மேலும், 6 பேர் தாக்கியதில் ஜானுக்கு வலது பக்கம் தலை, கை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டதால் கணேஷ் என்பவர் ஜானை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.குடிபோதையில் தாக்கிய நண்பர்களான ஆகாஷ், பிராங்க்ளின், பிரசாந்த், ராகுல் ஆகிய 4 பேர் மீது ஆக்டிங் டிரைவர் ஜான் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையை தொடர்ந்து ஜானை தாக்கியதாக பெரியகுப்பம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் உதயா (எ) கறி உதயா, பூங்கா நகர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த ஜான்சன் மகன் பிராங்க்ளின் (23), பெரியகுப்பம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த குணசேகரன் மகன் ஸ்டீபன் (25) ஆகிய 3 பேரை திருவள்ளூர் டவுன் போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள ஆகாஷ் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.