பதிவு:2024-11-08 12:45:57
திருநின்றவூரில் வரும் 9 ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :
திருவள்ளூர் நவ 07 : திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து 09.11.2024 சனிக்கிழமை அன்று திருநின்றவூர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவிருந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களால் முகாம் நடைபெறும் நாள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்ற 16.11.2024 சனிக்கிழமை அன்று திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான 15,000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.
முகாமில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த 200 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ, பொறியியல், நர்சிங் படித்தவர்கள் கலந்து கொண்டு தனியார் துறையில் பல்வேறு வகையான வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.
இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் எனவும் விருப்பமுள்ள வேலைநாடும் இளைஞர்கள் இம்முகாமில் அதிக அளவில் கலந்து கொண்டு தங்களுக்கு தகுதியுள்ள வேலைவாய்ப்பினை பெற்று பயன் பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்தார்.