பதிவு:2024-11-08 12:48:37
விளங்காடுபாக்கத்தில் சென்னையில் உள்ள அரியலூர் ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாயை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் நவ 08 : திருவள்ளூர் மாவட்டம். பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட விளங்காடுபாக்கம் பகுதியில் சென்னையில் உள்ள அரியலூர் ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாயை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பணிகள் பல்வேறு இடங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பொன்னேரி வட்டம் விளங்காடுபாக்கம் பகுதியில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகையில் விளங்காடுபாக்கம் பகுதியில் இருந்து சென்னையில் உள்ள அரியலூர் ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாயை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் அறிவுறுத்தினார்.
இதில் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.