பதிவு:2024-11-08 12:50:35
திருவள்ளூரில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் பணிகள் குறித்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் :
திருவள்ளூர் நவ 08 : திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாமில் - 2025 மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில் 01.01.2025-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு திருவள்;ர் மாவட்டத்தில் அடங்கியுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் - 2025 தொடர்பான முகாம்கள் நடைபெறவுள்ளன. அலுவலகங்கள், ஆவடி மாநகராட்சி மற்றும் திருவள்;ர் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இடங்கள் 3699 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 1315 பள்ளிகளிலும் 01.01.2025-ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொரு வரும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ம், வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6 ஏ -ம், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க படிவம் 6 பி-ம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆட்சேபனை அல்லது பெயர் நீக்கக் கோர படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்துப் பிழைகள், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம், முதலியவற்றிற்கு படிவம் 8-ம், தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள நியமிக்கப்பட்டுள்ள இடங்களான வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் 29.10.2024 முதல் 28.11.2024 வரை அனைத்து அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், சிறப்பு முகாம் நாட்களான 16.11.2024,17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில்; முகாம்களில் படிவங்களைப் பெற்று பயனடையலாம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் மற்றும் பணிகள் எவ்வித சுணக்கமுமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ,மேலும் தகுதியுடைய நபர்கள் விடுபாடுகள் இன்றி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும் மற்றும் நீக்கல் செய்தல் தொடர்பாகவும்,சிறப்பு சுருக்க முறை திருத்தம் - 2025 – யில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சத்தய பிரசாத், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்) க.தீபா (திருத்தணி) மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ் குமார், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான வட்டாட்சியர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.