திருவள்ளூர் பகுதியில் விதிமுறை மீறி அதிக பாரம் ஏற்றிய 45 வாகனங்களுக்கு ரூ.5.40 லட்சம் இணக்க கட்டணம் : வட்டாரப் போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை

பதிவு:2022-06-02 13:47:41

திருவள்ளூர் ஜூன் 02 : திருவள்ளூர் பகுதியில் விதிமுறை மீறி அதிக பாரம் ஏற்றப்பட்டு சரக்கு வாகனங்கள் இயக்குவது தொடர்பாக சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் சு.மோகன் அவர்களின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கா.பன்னீர் செல்வம், கோ.மோகன் ஆகியோர் சோதனை செய்தனர்.

சோதனையில் சுமார் 45 சரக்கு லாரிகளை ஆய்வு செய்து அதில் அதிக சுமை, அனுமதிக்கு புறம்பாக சரக்கு ஏற்றும் பகுதியை உருமாற்றம் செய்யப்பட்ட, தகுதிச்சான்று மற்றும் சாலை வரி கட்டாத சரக்கு டிப்பர் லாரிகள் மூன்று வாகனங்களை சிறை பிடித்தும் ஆறு வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கியும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இதன் மூலமாக ரூ.5,40,000 இணக்க கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின் வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்கள் நேரில் வந்து சரக்கு ஏற்றும் பகுதியில் அதிகப்படியாக வைத்துள்ள ரீப்பரை உடனடியாக எடுத்து விடுவதாகவும், பின் பகுதியில் தார் பாலின் கொண்டு மூடி வாகனத்தை இயக்குவதாகவும் உறுதி அளித்தனர்.