பதிவு:2024-11-08 12:52:15
திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் நவ 08 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநில தழுவிய வேலை நிறுத்தம் மாவட்ட தலைநகரங்களில் 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜா பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது, திருச்சி மாநகரம் கூட்டுறவு பண்டக சாலையில் பணியாற்றும் பெண் பணியாளர் பாத்திமா அவர்களை கொலை மிரட்டல் விடுத்த சமூக விரோதிகள் மீதும், அவர் மகன் மீது பதியப்பட்டுள்ள பொய் கஞ்சா வழக்கை சி.பி.சி.ஐ.ஐ.விசாரணை நடத்த வேண்டும், பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும்.
சரியான எடையில் தரமான பொருள்களை அனைத்தும் (அரிசி உள்ளிட்ட) பொட்டலமாக வழங்கப்பட வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர்கள் தற்போது 47% சதவிகிதமே அகவிலைப்படி பெற்று வருகிறார்கள். அரசுப் பணியாளர்கள் பெற்று வரும் 50% அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் கேட்டுக் கொண்டனர்.இதில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.