ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் சார்பில் திருவள்ளூர் கோசாலையில் 43 ஏழை குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு மாடுகள் வழங்கப்பட்டது :

பதிவு:2024-11-12 15:19:54

திருவள்ளூர் நவ 11 : திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் பக்தர்கள் வேண்டுதலுக்காக கொடுக்கப்பட்ட மாடுகள் அஹோபில மடம் ஆதினம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோசாலையில் 400-க்கும் மேற்பட்ட கறவை கன்றுகள் மற்றும் காளை மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கு பராமரிக்கப்படும் மாடுகளை ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் அஹோபில மடம் ஆதீனம் சார்பில் மாடுகளை இலவசமாக வழங்க மாவட்ட கவெக்டரின் பரிந்துரையின்படி ஏழை மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மகளிர் சுய உதவி குழுவில் உள்ள பழங்குடியின மக்கள் 48 பேருக்கு கறவை மாடுகள் கன்றுகள் இலவசமாக குலுக்கல் முறையில் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது கட்டமாக நேற்று ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் மேலாளர் ரங்கராஜன், பி ஆர் ஓ சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள் கேசவன் கண்ணன் ஆகியோர் மகளிர் சுய உதவி குழுவில் உள்ள அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினரை தேர்வு செய்து 43 நபர்களுக்கு கறவை கன்று மற்றும் காளை மாடுகள் குலுக்கல் முறையில் இலவசமாக வழங்கினர்.