நாராயணபுரம் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வருடத்திற்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடையை உடனடியாக திறக்க பொதுமக்கள் கோரிக்கை :

பதிவு:2024-11-12 15:21:40

திருவள்ளூர் நவ 11 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் பட்டரைப் பெரும்புதூர் ஊராட்சி நாராயணபுரம் கிராமத்தில் 800 குடும்பங்களை சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வரதாபுரம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

பெண்கள், முதியோர்கள் நீண்ட தூரம் சென்று வர சிரமமாக இருப்பதால் நாராயணபுரம் கிராமத்திலேயே புதிதாக நியாய விலை கடை திறக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2022-23-ஆம் நிதி ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டப்பட்டது.

ஆனால் கட்டி முடிக்கப்பட்டு ஓர் ஆண்டு ஆகியும் இதுவரை திறக்கப்படாததால் முதியோர்கள் வரதாபுரம் பகுதிக்கு சென்று நியாய விலை கடையில் பொருட்களை வாங்கி வருவதற்கு பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடையை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.