திருவள்ளுர் அருகே சட்ட விரோதமாக ஆற்று மணல் கடத்திய நபர் போலீசார் கைது : மணலுக்கு பயன்படுத்திய மினி வேன் பறிமுதல் :

பதிவு:2024-11-12 15:23:58

திருவள்ளுர் அருகே சட்ட விரோதமாக ஆற்று மணல் கடத்திய நபர் போலீசார் கைது : மணலுக்கு பயன்படுத்திய மினி வேன் பறிமுதல் :

திருவள்ளுர் அருகே சட்ட விரோதமாக ஆற்று மணல் கடத்திய நபர் போலீசார் கைது : மணலுக்கு பயன்படுத்திய மினி வேன் பறிமுதல் :

திருவள்ளூர் நவ 11 : திருவள்ளூர் அடுத்த புதுமாவிலங்கை கூவம் ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்துவதாக கடம்பத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.சம்பவ இடத்திற்கு சென்ற கடம்பத்தூர் பொறுப்பு உதவி ஆய்வாளர் பரமசிவம் தலைமையிலான போலீசார் போலீசாரை கண்டதும் அந்த வாகனத்தில் இருந்த 3 பேரும், வண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.

அதில் திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் பகுதியை சேர்ந்த மினி வேன் டிரைவர் சீனிவாசன் ( 23) என்பவரை மடக்கி பிடித்து மணலுக்கு பயன்படுத்தி மினி வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டார்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள இருவரை கடம்பத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.