கூனிப்பாளையத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் ஆழத்திற்கு மண் எடுப்பதால் கிணற்று நீர், நிலத்தடி நீர் பாதிப்பு : நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு :

பதிவு:2024-11-12 15:30:24

திருவள்ளூர் நவ 12 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கூனிபாளையம் கிராமத்தில் பட்டா நிலத்தில் மண் எடுக்க திருவள்ளூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் சென்னையை அடுத்த வில்லிவாக்கத்தை சேர்ந்த ஜே பாஸ்கர் என்பவருக்கு குவாரி மூலம் கடந்த 12.1.2024 முதல் 11.1.2025 வரை ஒரு வருடத்திற்கு கிராவல் மண் எடுக்க அனுமதித்தனர்.

இந்நிலையில் நிர்ணயித்த அளவைவிட அதிக அளவு ஆழம் மண் எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அதிகாலை முதல் இரவு 11 மணி வரை மணி எடுப்பதாகவும், இதனால் ஆழ்துளை கிணறு உள்வாங்கி கிணற்று நீரை குடிக்க முடியாத அளவுக்கு நிறம் மாறியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் ஊற்று கிணறு நீரை பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது மாசுபட்டு குடிக்க லாயக்கற்ற நிலையில் மாறியதுடன், அந்த நீரை குடிப்பதால் ஜுரம், வாந்தி, பேதி என பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதால் அந்த கிணற்றை சுற்றி வேலி அமைத்து பாதுகாப்பதோடு கிணற்று நீரை பயன்படுத்த ஏதுவாக குவாரியை தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.