பதிவு:2024-11-12 15:34:05
திருவள்ளூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் வரும் 23 தேதிக்கு ஒத்திவைப்பு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் நவ 12 : திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு 01.11.2024 அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டமானது நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 23.11.2024 அன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல் , கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும்.
இவ்வாறு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்துகொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை கூட்ட விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.