அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்ல இருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : 3 பேர் கைது

பதிவு:2022-06-02 13:50:09

அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்ல இருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : 3 பேர் கைது

அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்ல இருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : 3 பேர் கைது

திருவள்ளூர் ஜூன் 02 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு காவல் துறையினருக்கு அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் திருவாலங்காடு நான்கு முனை சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அசோக் லேலாண்ட் டோஸ்ட் வாகனத்தை சோதனை செய்தனர்.

அதில் 4 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுனர் வியாசர்பாடியை சேர்ந்த பேதாராமன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சரவணன், மதன், ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மூவரையும் ரேஷன் அரிசியுடன் திருவள்ளூர் குடிமை பொருள் வழங்கல் ஆய்வாளர் சுந்தரம்மாளிடம் ஒப்படைத்தனர். குடிமை பொருள் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.