பதிவு:2024-11-13 16:34:54
ஆவடியில் தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் : நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் :
திருவள்ளூர் நவ 13 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 7 மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.98.59 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை விரிவாக்க திட்டம் மற்றும் ரூ.59.92 கோடி மதிப்பீட்டில் விடுபட்ட பகுதிகளில் குடிநீர் விரிவாக்க திட்ட பணிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் சு.சிவராசு, ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), துரை சந்திரசேகர் (பொன்னேரி) ஆவடி மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. இராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,ஜவஹர்லால் நேரு ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். பின்னர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தெரிவித்ததாவது :
தமிழ்நாட்டில் 25 மாநகராட்சி உள்ளன முதல் முதலில் ஆவடி மாநகராட்சியில் 24 நேரமும் குடிதண்ணீர் வழங்கும் பணியினை முதலமைச்சர் ஆவடி மாநகராட்சிக்கு வழங்கி உள்ளார். ஏற்கனவே ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் 4 மற்றும் 5 வார்டுகளுக்கு குடிநீர்த் திட்டப்பணிகள் வழங்கி வருகிறது தற்பொழுது இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது மேலும் 5 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் 10 அல்லது 15 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துவிடும். அப்போது ஆவடி மாநகராட்சி உள்ள பகுதிகளுக்கு எப்போது நினைத்தாலும் குடிநீர் கிடைக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இன்னும் சொல்லப்போனால் மெட்ரோ திட்ட பணிகள் முடிவு பெற்றவுடன் ஆவடி மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 20 எம்எல்டி தண்ணீர் வந்து சேரும்.
மேலும், தேர்வாய்கண்டிகை புதிய கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் தனியாக ஆவடி மாநகராட்சிக்காக திட்ட அறிக்கை போடப்பட்டுள்ளது அதையும் உரிய முறையில் பெற்று ஆவடி மாநகராட்சிக்கு முழுமையாக அனைத்து பகுதிகளுக்கு 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதோடு மீதமுள்ள பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது. கழிவுநீர் வெளியேறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குடிநீர் திட்ட பணிகளுக்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. தற்பொழுது புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு அதாவது விடுபட்டுள்ள 17000 எண்ணிக்கை குடியிருப்புகளுக்கு வீட்டின் இணைப்பு வழங்குவதற்கு சுமார் 102.30 கி மீ நீளத்திற்கு பகிர்மான குழாய் பதிக்க ரூ.100 கோடி மதிப்பீட்டில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நகராட்சி துறை அமைச்சர் கே.என.நேரு தெரிவித்தார்.
பின்னர், நகராட்சி துறை அமைச்சர் கே.என.நேரு பேரிடர் மீட்பு குழு தன்னார்வலர்களுக்கு சீருடை வழங்கினார்.இதில் ஆவடி மாநகராட்சி துணை மேயர் சூரியகுமார் மண்டல தலைவர்கள், அம்மு, அமுதா,ராஜேந்திரன், ஜோதிலட்சுமி, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.