பதிவு:2024-11-13 16:37:49
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உணவே மருந்து மற்றும், நலம் தரா உணவு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி :
திருவள்ளூர் நவ 13 : திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உணவு மற்றும் பால் வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உவு மற்றும் பால் வளத் தொழில்நுட்பக் கல்லூரியும், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையும் இணைந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக உணவே மருந்து மற்றும், நலம்தரா உணவு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் நியமன அதிகாரி ஜெகதீஷ் சந்திர போஸ் தலைமையில் நடைபெற்றது
உணவே மருந்து மற்றும் நலம்தரா உணவு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நலம்தரா உணவுகளின் பக்க விளைவுகளையும், ஆரோக்கியமான உணவுகள் குறித்தும். மேலும். சரிவிகித உணவுமுறைகள் பற்றியும், சிறுதானியங்களின் ஏற்படும் நன்மைகள் குறித்தும் உணவில் கலப்படம் இருப்பதை எவ்வாறு எளிய முறையில் கண்டறிய வேண்டும் என்பது குறித்தும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் நியமன அதிகாரி, டாக்டர் ஜெகதீஷ் சந்திர போஸ், அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள் இந்நிகழ்வில் தொடக்கப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி, உணவு பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு தரும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.இதில் கல்லூரி முதல்வர் நா.குமரவேலு. மாணவர்களுக்கு கல்லூரி உதவி பேராசிரியர்கள் எஸ். கே மாதங்கி,வி. நித்யலட்சுமி, வி.பேராசிரியன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இ.மாணிக்கவாசகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்