பதிவு:2024-11-13 16:39:38
திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் நவ 13 : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும், தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மாநில தழுவிய மாவட்ட தலைநகரில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.மாவட்ட துணை தலைவர்கள் ஹேமலதா, செஞ்சிகான், மாவட்ட இணை செயலாளர்கள் முனுசாமி,மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் பூபாலன்,இளங்கோவன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் மணி விளக்க உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்,காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும், காலமுறை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5,00,000 மற்றும் 3,00,000 வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9.000 வழங்க வேண்டும். விலைவாசி உயர்வு க்கேற்ப உணவு மானியம் உயர்த்தி வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு 12 மாதமாக வழங்கிட வேண்டும். கருணை அடிப்படையில் தகுதியுள்ள ஆண் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். சமையலர்கள் சமையல் உதவியாளர்களுக்கு தகுதி அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்திட வேண்டும். 10/20/30 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் திவ்யா,வெண்ணிலா,ஜெயராமன்,நாயகம்,சங்கரன், நாராயணன், மாநில துணை தலைவர் காந்திமதிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாநில சுந்தரம்மாள்,மாவட்ட பொருளாளர் வசந்தா ஆகியோர் நன்றி கூறினர்.