பதிவு:2024-11-13 16:42:57
திருவள்ளூரில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் நவ 13 : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை பல்வேறு வகையான கண்காட்சிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 2024 -25- ம் ஆண்டிற்கான கட்டாய கண்காட்சி மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை திருவள்ளூர் ஜே.என்.சாலையில் அமைந்துள்ள மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருவள்ளூரில் 30 முதல் 40 அரங்கு வரை உள்ளடக்கிய விற்பனை கண்காட்சி 15.11.2024 முதல் 24.11.2024 முதல் 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில் பங்குபெற விருப்பமுடைய மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது விற்பனை பொருட்கள் பற்றிய விவரத்தை மேலாளர்,மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், (மகளிர் திட்டம்) திருவள்ளூர் தொலைபேசி எண். 044 – 27664528, 9176099966–ல் தொடர்பு கொண்டு விண்ணப் படிவத்தினை பெற்று 14.11.2024 மாலை 5 மணிக்குள் முன்பு பதிவு செய்து மேற்படி கண்காட்சியில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.