பதிவு:2024-11-13 16:44:12
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் டாக்டர்.அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் நவ 13 : தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அறிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்து கொண்டு அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகள் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர்.அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
அவ் வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான டாக்டர்.அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற விரும்புவோர் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்கள் 26.11.2024-க்குள் திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.