திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்ற மாற்றுத்திறனாளிகள் புதிய வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-11-13 16:47:06

திருவள்ளூர் நவ 13 : திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்ற மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் பழுதடைந்திருந்தால், அதற்குப் பதிலாக மீண்டும் புதிய வாகனம் பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தில், புதிய வாகனம் பெற விருப்பமுள்ளவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் நகல் ,ரேஷன் கார்டு நகல்,UDID CARD நகல், ஏற்கனவே பெற்ற வாகனத்தின் பதிவு புத்தகம் நகல் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் போட்டோ 2 ஆகியவற்றுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திருவள்ளூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ 22.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தெரிவித்தார்.