பதிவு:2024-11-22 15:17:10
திருவாலங்காடு திருத்தணி கூட்டுறவு ஆலையில் 2024-25 ம் ஆண்டிற்கான கரும்பு அரவை : சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் நவ 22 : திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு திருத்தணி கூட்டுறவு ஆலையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் 2024-25 ம் ஆண்டிற்கான கரும்பு அரவை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சந்திரன் (திருத்தணி), வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் கே.நர்மதா ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து பேசினார்.
திருவாலங்காடு உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024-25 ம் ஆண்டிற்கான கரும்பு அரவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது இந்த 2024-25 ம் பருவத்தில் 2 லட்சம் மெ.டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 9.50 விழுக்காடு சர்க்கரை கட்டுமானத்தில் 1.90 லட்சம் குவிண்டால் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
ஆலையின் இயந்திர தளவாடங்கள் நல்ல நிலையில் உள்ளது கரும்பு அரவை எவ்விதம் நிறுத்தம் இல்லாமல் இயக்கப்படும் விவசாய பெருமக்கள் ஆலைக்கு கரும்பு கொண்டு வந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
இதில் திருத்தணி வட்டாட்சியர் திருமதி.மலர்விழி, கரும்பு பெருக்கு அலுவலர் பேரயப்பன், மாவட்ட கவுன்சிலர் சரவணன் மற்றும் விவசாயிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.