பதிவு:2022-06-02 13:55:14
திருத்தணி அருகே நான்கு டன் எடை கொண்ட செம்மரக்கட்டை வேர்களை விற்க முயன்றதாக 4 பேர் கைது : ஆந்திர மாநில சிறப்பு படை போலீசார் நடவடிக்கை
திருவள்ளூர் ஜூன் 02 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தாழவேடு பகுதியில் வஜ்ரவேலு என்பவர் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்து போது தனது நிலத்தில் அரசியல் அனுமதியோடு செம்மரங்களை வளர்த்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வஜ்ரவேலு உயிரிழந்த நிலையில் அவரது மனைவி ராணி அம்மாள் செம்மரத்தின் வேர்களை குடோனில் வைத்திருந்த நிலையில் அதனை விற்பனை செய்ய வேண்டுமென ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கடம்மாநல்லூர் சங்கர் என்பவரிடம் விசாரித்துள்ளார்.
இதனையடுத்து ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள இடைத்தரகர்களான நாராயண ரெட்டி, துரைவேலு, சீனு அய்யரிடம் சங்கர் செம்மர பெயர்களை விற்பனை சம்பந்தமாக பேசியுள்ளார். அந்த மூன்று பேரும் ஆந்திர மாநிலத்தில் செம்மரங்களை வாங்கி விற்பனை செய்யும் நபர்களை அணுகியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர மாநில சிறப்பு பிரிவு போலீசார் ஏற்கனவே செம்மரங்களை கடத்தியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர் மூலம் செம்மர வேர்களை வாங்க வருவதாக தகவலை சொல்லி திருத்தணி அடுத்த தாழவேடு பகுதிக்கு சங்கர் நாராயண ரெட்டி திரை வேலு சீன் ஆகிய 4 பேரையும் வரவழைத்தனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஆந்திர மாநில போலீசார் நான்கு பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 4 டன் எடை கொண்ட செம்மர கட்டைகளையும் பறிமுதல் செய்து நிலத்தின் உரிமையாளரான ராணி அம்மாள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தாழவேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.