ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் : ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் பேட்டி :

பதிவு:2024-11-23 12:39:22

திருவள்ளூர் நவ 22 : அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியையை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவள்ளூரில் அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுமேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த ஆசிரியை ரமணியை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பள்ளிகளில் பணி செய்யும் இடங்களிலும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், ஞானசேகரன், பிரபாகரன் உட்பட 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை பள்ளி வளாகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும்.

பள்ளிகளில் நியமிக்கப்பட்டு இருந்த பகல், இரவு காவலர்களை நீக்கி விட்டதால் மீண்டும் அவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்றும் , அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ஆசிரியர் சங்கத்தினர் எச்சரித்தனர்.