திருவள்ளூர் அடுத்த கைவண்டூரில் கழிவுநீர் வீட்டு முன் தேங்கிய தகராறில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு :

பதிவு:2024-11-23 15:41:08

திருவள்ளூர் அடுத்த கைவண்டூரில் கழிவுநீர் வீட்டு முன் தேங்கிய தகராறில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு :

திருவள்ளூர் அடுத்த கைவண்டூரில் கழிவுநீர் வீட்டு முன் தேங்கிய தகராறில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு :

திருவள்ளூர் நவ 22 : திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னி(38) இவர் தன்னுடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் சந்தியா என்பவர் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து விட்டு முன்பு தேங்கி நிற்பதால் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு.

இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி மீண்டும் இவர்களுக்கிடையே இது குறித்து வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது . இதனால் மிகுந்த உளைச்சலில் இருந்த பொன்னி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து வந்து சந்தியா வீட்டின் முன்பு தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீயிட்டுக் கொண்டார்.

அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பொன்னியை ஆபத்தான நிலையில் பலத்த தீக்காயங்களுடன் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொன்னி சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார் மேலும் இந்த தீ விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.