பதிவு:2024-11-23 15:43:11
ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் பூனை பிடிப்பது போன்று வீட்டை நோட்டமிட்டு வீடுகளில் நகை பணம் திருடிய பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு :
திருவள்ளூர் நவ 22 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த நந்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுச்சேரி பகுதியில் பொன்னியம்மாள் குடும்பத்துடன் கடந்த எட்டாம் தேதி ஆந்திராவுக்கு உறவினர் இறப்புக்காக சென்று வீடு திரும்பி உள்ளனர்.பின்னால் பீரோவில் வைத்திருந்த 12 சவரன் நகை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அது தொடர்பாக பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் பென்னலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்ததில் ஆந்திரா காளாஸ்திரி பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (35)அவர் மனைவி பிரமிளா(30) கும்மிடிப்பூண்டி கோங்கல்மேடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (26) அஜித் (21) ஆகிய நான்கு பேரையும் அடுத்து அடுத்து போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பூனை பிடிப்பது போன்று வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடமிருந்து 15 சவரன் நகைகளை பறிமுதல் செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.