பதிவு:2024-11-23 15:48:04
மேலானூர் கிராமம் மூலக்கரை முதல் மெய்யூர் சாலை வரை செல்லும் சாலை மூடப்படுவதால் பொதுமக்களுக்காக தரை வழி பாலம் அமைப்பதற்கான பணி : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் நவ 23 : திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், வெள்ளியூர் குறுவட்டம், 24.மேலானூர் கிராமம், மூலக்கரை சந்திப்பில் மூலக்கரை முதல் மெய்யூர் சாலை வரை செல்லும் சாலை மூடப்படுவதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தரை வழி பாலம் அமைப்பதற்கான பணியை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், வெள்ளியூர் குறுவட்டம், 24.மேலானூர் கிராமம், மூலக்கரை சந்திப்பில் சி பி ஆர் ஆர் திட்டத்தின் கீழ் மூலக்கரை முதல் மெய்யூர் வரை செல்லும் சாலையானது மூடப்படுவதால் தற்போது பயன்பாட்டில் உள்ள சாலைக்கு அருகில் புதிய தரைவழி சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்தற்கிணங்க, கள ஆய்வு மேற்கொண்டபோது, மேலானூர் கிராமம் மூலக்கரை சந்திப்பில் உள்ள தரை வழி பாலத்தின் இருபுறமும் ஏரி நீர் மற்றும் மழைநீர் உள்ளே புகாதவாறு கான்கிரீட் தடுப்பு ஏற்படுத்திடவும் மேலும், மழைக்காலங்களில் தரை வழிபாலம் தேங்கும் மழைநீரினை வெளியேற்ற வடிகால் அமைத்திடவும், மூலக்கரை சந்திப்பிலிருந்து தரை வழி பாலம் மற்றும் மேற்படி கிராமங்களுக்கு செல்ல நாசரேத்திலிருந்து சர்வீஸ் சாலையும், திருவள்ளூருக்கு செல்ல மேலானூரிலிருந்து சர்வீஸ் சாலையும் ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் கோட்டப் பொறியாளர் சங்கர் (TNRIDC ), திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன், மற்றும் எல் & டி நிர்வாகிகள், வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.