குரங்கு கையில் பூமாலை என்பது போல் தமிழகத்தில் ஆட்சி நடப்பதாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கள ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி :

பதிவு:2024-11-23 15:53:08

திருவள்ளூர் நவ 23 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து கள ஆய்வுக் கூட்டம் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான பி வி ரமணா தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் எம்பி ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கள். இதில் முன்னாள் எம்பிக்கள் திருத்தணி கோ.ஹரி, வேணுகோபால், எஸ்.ஆர்.விஜயகுமார் உட்பட மாவட்ட ஒன்றிய, நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழக மின்சார வாரியமும் அதானியிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் நிலையில் விசாரணை முடிவில் ஊழல் நடந்ததா என்பது தெரியவரும் என்றும், தமிழகத்தில் தனிப்பட்ட முறையில் நடைபெறும் கொலைக்கும் அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என திமுகவைச் சேர்ந்த ஆர் எஸ் பாரதி சொல்வதற்கு வெட்கம் இல்லையா என கேள்வி எழுப்பினார். குரங்கு கையில் பூ மாலை என்பது போல தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயியுள்ளது.

வருகிற 2026 தேர்தல் அதிமுகவுக்கு நெருக்கடியான தேர்தல் என திருமாவளவன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, திருமாவளவனுக்கு என்ன நெருக்கடியோ என தெரிவித்தார். தமிழகம் முழுவதும் அதிமுக இரண்டு கோடி தொண்டர்களுடன் எழுச்சியான சூழ்நிலையில் அதிமுக உள்ளதாக தெரிவித்தார். மேலும், வரி உயர்வு, கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை நடமாட்டத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரை கொல்ல முயற்சி செய்த சம்பவம், பெண் ஆசிரியரை வகுப்பறையில் குத்தி கொலை செய்த சம்பவம் ஆகியவை தனி நபருக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி போனதாக குற்றம் சாட்டினார்.

எனவே வருகிற 2026 தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் .சீமான் கட்சியிலிருந்து விஜய் கட்சிக்கு நிர்வாகிகள் மாறியது குறித்து கேட்டதர்கு இரட்டை இலைக்கு ஓட்டு போட்டவர்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் மாற மாட்டார்கள். 53 ஆண்டுகளை கடந்து 100 ஆண்டுகளே ஆனாலும் அதிமுக காரன் மாற மாட்டான் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.