திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மகளிர் சங்க ஆலோசனை கூட்டம் :

பதிவு:2024-11-23 15:58:06

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மகளிர் சங்க ஆலோசனை கூட்டம் :

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மகளிர் சங்க ஆலோசனை கூட்டம் :

திருவள்ளூர் நவ 23 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவள்ளூர் தொகுதி மகளிர் சங்க ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் தலைமையில் மணவாள நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் சங்க செயலாளர் இரா. சரளா ராஜூ கலந்து கொண்டு திருவள்ளூர் தொகுதி மகளிர் பொறுப்பாளர்களை நியமிப்பது, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடேசன், வழக்கறிஞரணி செயலாளர் யோகனந்தன், மாவட்ட பொருளாளரும் கவிஞருமான ப. சித்ரா,தொகுதி செயலாளர் கேசவன், தொகுதி தலைவர் அன்பு, கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.