அயப்பாக்கத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் சமுதாய வளைகாப்பு விழா : அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சா.மு. நாசர் துவக்கி வைத்தனர் :

பதிவு:2024-11-26 11:07:20



அயப்பாக்கத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் சமுதாய வளைகாப்பு விழா : அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சா.மு. நாசர் துவக்கி வைத்தனர் :

அயப்பாக்கத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் சமுதாய வளைகாப்பு விழா : அமைச்சர்கள்  
மா. சுப்பிரமணியன், சா.மு. நாசர் துவக்கி வைத்தனர் :

திருவள்ளூர் நவ 25 : திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் பேரறிஞர் அண்ணா எழில் பசுமை பூங்கா வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் க.கணபதி, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை வை. ஜெயக்குமார், அயப்பாக்கம் ஊராட்சித் தலைவர் அ.ம.துரைவிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்பொழுது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது :

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் ஊராட்சியில் நடைபெறும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமில் 24 அரங்குகளில் பொது மருத்துவம் இருதய நோய் மருத்துவம் எலும்பு மூட்டு மருத்துவம் பல் மருத்துவம் தோல் நோய் மருத்துவர் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம் குழந்தைகள் நல மருத்துவம் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் மருத்துவம் சித்த மருத்துவம் காது மூக்கு தொண்டை மருத்துவம் கண் மருத்துவம் முதியோர் நல மருத்துவம் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவம் காச நோய் மருத்துவம் மனநல மருத்துவம் மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சைகள் மருத்துவர்கள் மூலம் அளிக்கப் படுகிறது. மேலும் எக்ஸ்ரே இசிஜி மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனைகளும் முகாமில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் உள்ளாட்சி தினம் உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் பங்களிப்பினை உணர்த்தும் தினம் மற்றும் உள்ளாட்சிகளின் உரிமைகளை நிலைநாட்டும் தினம் இத்தினத்தில் அயப்பாக்கம் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் 108 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தாயுள்ளத்தோடு வளைகாப்பு சீதனங்களும், ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.அயப்பாக்கம் மற்றும் மதுரவாயல் பகுதியில் உள்ள பொதுமக்கள் 15000 பட்டாக்கள் கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்கள் வழங்கும் பணிக்கு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம்

தொடர்ந்து கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 9 மாணவ மாணவிகளுக்கு கண் கண்ணாடியும், தேசிய குழந்தை நலத்திட்டத்தின் கீழ் அன்ன பிளவு மேற்கொண்ட சிறுவன் மகிமாறன் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைச்சரிடம் மலர் கொடுத்து நன்றி தெரிவித்தார். தொடர்ந்து இருதய அறுவை சிகிச்சை பெற்று மாணவி தெய்வானை, அனிகா தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், காச நோயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர்கள் வழங்கினர்.

முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பல்வேறு சிகிச்சைகளுக்காக மருத்துவர் கொண்ட குழு அமைக்கப்பட்ட 24 அரங்கினை அமைச்சர்கள் பார்வையிட்டனர். இதில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியா ராஜ், (திருவள்ளூர்), பிரபாகரன்(பூவிருந்தவல்லி), இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மீரா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.