திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து ஆலோசனை கூட்டம் :

பதிவு:2024-11-26 11:09:11



திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து ஆலோசனை கூட்டம் :

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து ஆலோசனை கூட்டம் :

திருவள்ளூர் நவ 25 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க முறை திருத்தம் - 2025 தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அணில் மிஸ்ரம் தலைமை தாங்கினார்.

01.01.2025-ஆம் தேதியை தகுதியேற் படுத்தும் நாளாகக் கொண்டு திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க முறை திருத்தம் - 2025 தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 2025-ன் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொருட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளராக, இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள அணில் மிஸ்ரம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து, வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டார்.

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, சிறப்பு முகாம்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான அவர்களின் சந்தேகங்களுக்கு, சம்பந்தப்பட்ட அலுவலர்களின் மூலம் விளக்கங்களை வழங்கினார். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளைப் பின்பற்றி, அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக ;கூட்டத்தில் முன் வைத்த கோரிக்கைகளின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும், மேலும் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளை திறம்பட மேற்கொள்ளுமாறும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அணில் மிஸ்ரம் அறிவுறுத்தினார்.

பின்னர் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெய்வேலி, பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புல்லரம்பாக்கம் பகுதிகளில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் - 2025 தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை திருவள்ளூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அணில் மிஸ்ரம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த்,வருவாய் கோட்ட அலுவலர்கள் கற்பகம் (திருவள்ளூர்), தீபா திருத்தணி மற்றும் மத்திய சென்னை), மண்டல அலுவலர்கள் (மண்டலம்-ஐ,திருவொற்றியூர் மற்றும் மண்டலம்- VII, அம்பத்தூர்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) சத்தியபிரசாத்,வெங்கட்பிரசாத் (பொது), தனி வட்டாட்சியர் (தேர்தல்) செல்வம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், துணை வட்டாட்சியர்கள் (தேர்தல்),அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.