உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சோராஞ்சேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு :

பதிவு:2024-11-26 11:11:21



உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சோராஞ்சேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு :

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சோராஞ்சேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு :

திருவள்ளூர் நவ 25 : உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோராஞ்சேரி ஊராட்சியில் கிராம சபை நடைபெற்றது. சோராஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் தலைமை தாங்கினார்.கிராம சபையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, ஆவடி துணை ஆணையர் ஐமன் ஜமால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்பொழுது அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்ததாவது :

உள்ளாட்சி தினம் என்பது உள்ளாட்சி பிரதிநிதிகளின் வலிமையை நிரூபிக்கக் கூடிய தினமாகும். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 524 இடங்களில் சிறப்பு கிராம சபை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 12,524 கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது இந்த கிராம சபையில் பல்வேறு திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். விடியல் பயணம் திட்டத்தில் 420 கோடி முறை மகளிர்கள் பயணம் செய்துள்ளார்கள், தாய் வீட்டு சீதனம் போல் மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையும்,கல்வித் துறையினை மேம்படுத்தும் வகையில் அரசு பள்ளியில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவியருக்கு மடிக்கணினி, இலவச பஸ் பாஸ் ,விலை இல்லா புத்தகம் மற்றும் சீருடை வழங்கி உயர்கல்வி தொடரும் அரசு பள்ளிகளில் படித்த மாணவ மாணவியருக்கு ரூ.1000 வழங்கி கல்வியை முன்னேற்றத்திற்கு கொண்டு சென்றவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். என்று அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஒவ்வொரு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டார்.தொடர்ந்து தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் தூய்மை பணியை சிறப்பாக பணியாற்றிய 6 தூய்மை காவலர்கள், 3 PLF பணியாளர்கள், 2 OHT OPERTOR. ஊராட்சி செயலர் ஆகியோர்களை பொன்னாடை அணுவித்து கௌரவித்தார்.

இதில் திட்ட இயக்குனர் வை .ஜெயக்குமார் (ஊரக வளர்ச்சி முகமை) , உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பரணி, பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.