பதிவு:2024-11-26 11:13:59
திருவள்ளூரில் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் "இளம் வாசகர்கள்" என்ற சிறப்பு திட்டம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் நவ 26 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நூலகத்தில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் இருந்து 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்தவும் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் "இளம் வாசகர்கள்" என்ற சிறப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் இருந்து 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்தவும் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் "இளம் வாசகர்கள்" என்ற சிறப்பு திட்டத்தை துவக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் வாசிப்பு திறன் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கவும் , ஒரு புதிய முயற்சியாக எடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் ஆட்சியரகத்தில் அமைந்துள்ள பொது நூலகத்திற்கு 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளை நாள்தோறும் 2 பள்ளிகள் வீதம் 80 மாணவர்களை அழைத்து புத்தகங்களை வாசிக்க செய்து மாணவர்கள் தரும் பின்னூட்டத்தின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாஹே சங்கத் பல்வந்த், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (கல்வி) பவானி, மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாணவிகள் கலந்து கொண்டனர்.