தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் : காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் வழங்கினார் :

பதிவு:2024-11-29 11:31:01

திருவள்ளூர் நவ 28 : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்கள் ஆயுதப்படை- 5 பேருக்கும், தமிழ்நாடு சிறப்பு க்காவல் 21 பேருக்கும் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேருக்கும் மற்றும் சிறைத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயில் வார்டன் 1 நபர் என மொத்தம் 39 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் .

அதனைத் தொடர்ந்து புதிதாக பணியில் சேர்ந்த காவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் வழங்கி பேசினார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ் பி., போதைப் பொருட்களின் கடத்தலை தடுக்க தமிழக ஆந்திர எல்லையோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பிற்கு பிறகே வாகனங்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

விதிமுறைகளை மீறி கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கடத்தி வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கைது செய்யப்படுவர்களிடம் அவர்கள் எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என கேட்டு அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட 22 காவல் நிலையங்களிலும் போதிய காவலர்கள் பணியில் இருப்பதாக தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதாகவும் அனைத்து காவல் நிலையங்களிலும் ஆறு சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதில் டிஎஸ்பி க்கள் தமிழரசி, சுரேஷ்பாபு, லோகேஸ்வரன், எஸ் பி அலுவலக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தேவநாராயணன், சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில் சுரேஷ் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்ரமணி உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.